Tuesday, December 11, 2012
இலங்கை::ஐந்து வருடங்களுக்கான தேசிய சுகாதார திட்டம் இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சுகாதாரத்துறையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் 25 பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டு வருடங்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கொண்டு இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment