Tuesday, December 11, 2012
ராமேசுவரம்::கச்சத்தீவு அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
பல முறை மத்திய, மாநில அரசுக்கு பல்வேறு போராட்டங்களால் தெரிவித்தும், இதுவரை உரிய தீர்வு காணப்படவில்லை.
ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று சுமார் 600 விசைப் படகுகளுடன் மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் மீன்வளம் மிகுந்து காணப்படும் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்களை பிடிப்பதற்காக வலைகளை வீசிக் கொண்டிருந்தனர். அப்போது சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படை வழக்கம்போல் ராமேசுவரம் மீனவர்களை இங்கு வந்து மீன்பிடிக்க கூடாது என்று கூறி மிரட்டியது.
மீனவர்கள் அவசர, அவசரமாக தங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை எடுத்துக் கொண்டு கரைக்கு திரும்பினர். ஆனால் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியது குறித்து மீனவர்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை.

No comments:
Post a Comment