Tuesday, December 11, 2012

போதிய ஆதாரங்கள் இன்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் அப்பாவிகளை விடுவிக்க வழிசெய்யும் வகையில் குற்றவியல் சட்டம் திருத்தப்படல் வேண்டும் - மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி பிரியந்த பெரேரா!

Tuesday, December 11, 2012
இலங்கை::போதிய ஆதாரங்கள் இன்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் அப்பாவிகளை விடுவிக்க வழிசெய்யும் வகையில் குற்றவியல் சட்டம் திருத்தப்படல் வேண்டும் என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று கொழும்பில் நடைபெற்ற வைபவத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 'எனது குரலுக்கு பெறுமதி உண்டு' எனும் தொனிப்பொருளிலேயே நடைபெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொலிஸாரின் கோரிக்கைக்காக சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்கும் வழக்கத்தை நீதவான்கள் சிலர் கொண்டிருக்கின்றனர்.

இதனால் அப்பாவி மக்களும் அவசியமின்றி சிறையில் இருக்கவேண்டியுள்ளது. விளக்க மறியல் கைதிகளை பெருமளவில் வைத்திருப்பதால் அரசாங்கத்திற்கு பெரும் செலவு ஏற்படுக்கின்றது. இந்த காரணங்களால் பிணை வழங்குதல் தொடர்பாக குற்றவியல் சட்டங்களை திருத்தவேண்டியுள்ளது என்றார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ நிறைவேற்றமுடியாத பிணை நிபந்தனைகளை நீதிபதிகள் விதிக்கக்கூடாது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment