Tuesday, December 11, 2012
இலங்கை::பல்மொழிக் கொள்கை அமுல்படுத்தப்படாமை ஆயிரக் கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்படுவதற்கு ஏதுவாக அமைந்தது என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளர். நாட்டில் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் தொடர்வதற்கான பிரதான ஏதுக்களில் பல்மொழிக் கொள்கை அமுல்படுத்தப்படாமை முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்மொழிக் கொள்கை தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல்மொழிக் கொள்கை என்பது கோஷமெழுப்பதற்கான ஓர் வாசகமல்ல எனவும், அது சமாதானத்திற்கான அடிப்படை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்மொழிக் கொள்கையை மேம்படுத்த அரசியல்வாதிகளை வலியுறுத்தி வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் பல்மொழிக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காத்திரமான பல்மொழிக் கொள்கையின் அவசியம் முக்கியமானது என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment