Wednesday, December 05, 2012
இலங்கை::ரணில் விக்ரமசிங்க என்பவர், பிறப்பிலேயே தோல்விகளை தனதாக்கி கொண்ட துரதிஷ்டவசமான தலைவர் எனவும் சந்திரிகா என்பவர், தற்போதைய அரசியலில் வங்குரோத்து பாத்திரம் எனவும் சுருக்கமாக சொன்னால், செல்லா காசு எனவும் ஜனநாயக கட்;சியின் ஆரம்பகால உப தலைவர் கலாநிதி மஹேஷ் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேக்கா, இந்த இரண்டு தலைவர்களையே தற்போது பிடித்து கொண்டிருக்கின்றார். இவர்களுடன் அவர் செல்லும் பயணத்தினால், அவர் அரசியல் அனாதையாகி விடுவார்.
சந்திரிகா என்பவர் தற்போது, ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர், சரத் பொன்சேக்கா, ரணில் விக்ரமசிங்கவிடம் ஆலோசனை பெறுகிறார். அவர் ரணிலுடன் செல்வதால், அவருக்கு ஒரு போதும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவி கிடைக்க போவதில்லை.
சரத் பொன்சேக்கா தற்போது ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கும் முனைப்பில் ஈடுபட்டிருந்தாலும் ரணில் விக்ரமசிங்க, கடந்த ஜனாதிபதி தேர்தலில், பொன்சேக்காவுக்கு குறைந்த பட்சம் வாக்கை கூட வழங்காதவர். 5 சதத்தைக் கூட உதவியாக வழங்காமல், தேர்தல் நேரத்தில் வெளிநாட்டுக்கு போனவர். இப்படியானவர்களுடன் அரசியல் பயணத்தை மேற்கொண்டு இறுதியில் பொன்சேக்கா ஒன்றுமில்லாத அரசியல் அனாதையாகி போவதி நிச்சயம்.
கட்சிக்காகவும் தமக்காகவும் குரல் கொடுத்தவர்களை காலால் உதைத்து விட்டு, சரத் பொன்சேக்கா, ஈழவாதிகளையும் முச்சக்கர வண்டியில் கூட செல்வற்கு ஆளில்லாத கட்சிகளை இணைத்து கொண்டு பொது எதிர்க்கட்சி உருவாக்க போவதாக கூறுவது கனவு மாத்திரமே. பொன்சேக்கா என்பவர் கடந்த காலத்தை மறந்து போன தலைவர். இதனை அப்போது ராஜபக்ஷ அரசாங்கம் மேடைகளில் கூறிய போது நாங்கள் அதனை நம்பவில்லை. எனினும் தற்போது அது உண்மையாகி வருகிறது. இவரை ஒரு சிறையில் அல்ல 10 சிறைகளில் தள்ளினாலும் திருந்த போவதில்லை. தவளை தன் வாயல் கெடும் என்பது பொன்சேக்காவுக்கு பொருத்தமானது. நன்றி மறந்தவர் எப்படி தலைவர் பதவிக்கு தகுதியாக இருப்பார். பொன்சேக்கா நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு மாத்திரமல்ல, பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு கூட தகுதியில்லாதவர் என்பது காட்டி விட்டார் எனவும் அத்தபத்து மேலும் கூறியுள்ளார்.



No comments:
Post a Comment