Thursday, December 06, 2012
இலங்கை::அடுத்த வருடம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை கூட்டத் தொடரின் போது, தமது நாட்டின் பிரதிநிதி பேரவையில் அங்கம் வகிக்காத போதிலும் இலங்கைக்கு உச்சளவிலான உதவியை வழங்குவதற்காக ஏனைய நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று தரும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அலெக்சாண்டர் ஏ. கர்வாவா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவங்சவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை கூறியுள்ளார். 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் ரஷ்யா அங்கம் வகிக்காது. எனினும் 2014 ஆம் ஆண்டு பேரவையில் அங்கம் வகிக்க ரஷ்யா எதிர்பார்த்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சர்வதேச அழுத்தங்களின் போது, இலங்கைக்கு எவ்விதமான அநீதியும் ஏற்படும் வகையில் ரஷ்யா செயற்படாது. 2013 ஆம் ஆண்டில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்காத போதிலும், தன்னுடன் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ள நாடுகளுடன் கலந்துரையாடி இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை ரஷயா வழங்கும். பிரேசில் உட்பட பல நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக் அமைப்பின் ஒத்துழைப்பை பெற்று கொள்ளவும் ரஷ்யா தயாராக உள்ளது எனவும் ரஷ்ய தூதுவர் கூறியுள்ளார.

No comments:
Post a Comment