Sunday, December 02, 2012
சென்னை:.தமிழக சட்டசபை வைர விழாவில் பேசிய கவர்னர் ரோசையா, எனது பெயரை சொல்ல மறந்திருக்கலாம்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக சட்டசபை வைர விழாவில் பேசிய, முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு என, மாநிலத்தின் பெயர், 1968ல் மாற்றப்பட்டது எனக் குறிப்பிட்டார். ஆனால், அதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்த, அப்போதைய முதல்வர் அண்ணாதுரையின் பெயரை குறிப்பிடவில்லை.இவருக்குப் பின் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழ்நாடு என பெயர் சூட்டியது அண்ணாதுரை தான் என, தெளிவாகக் குறிப்பிட்டார். அண்ணாதுரையின் பெயரை கூ ற மறந்துவிட்டாரா இல்லை கூறக்கூடாது என, ஜெயலலிதா விட்டுவிட்டாரா என தெரியவில்லை.
கவர்னர் ரோசையா பேசுகையில், முதல்வராகப் பணியாற்றி என் பெயரை கூறவில்லை. அவர் தைரியமானவர்; யாருக்கும் பயந்து, என் பெயரை வேண்டமென்றே சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்; தெரியாமல் விட்டிருப்பார்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment