Tuesday, December 04, 2012
இலங்கை::யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் கணேஷமூர்த்தி சுதர்சன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார.இதனை காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்..
28ஆம் திகதியும் 29ஆம் திகதியும் கைதான மாணவர்கள் நால்வரும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04.12.2012) ஆஜர்படுத்தப்பட்டவேளை, க.சுதர்சன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எனினும் பரமலிங்கம் தர்ஷானந், கனகசபாபதி ஜெயன், சண்முகம் சொலமன் ஆகிய மூன்று மாணவர்களையும் தொடர்ந்தும் காவற்துறை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 27ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக விடுதிகளில் மாவீரர் தினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்ட வேளை இராணுவத்தினரும் காவற்துறையினரும் அத்துமீறி நுழைந்தாக குறிப்பிட்டு மறுநாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
இதன்பின் கடந்த 28ஆம் திகதியும் 29ஆம் திகதியும் மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
யாழ். திருநெல்வேலியிலுள்ள சிறிரெலோ அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியமை மற்றும் மாவீரர் நாள் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டியமை ஆகிய குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment