Tuesday, December 04, 2012
சென்னை::ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை போன்று பலமான அரசாங்கம் இலங்கையில் கடந்த காலங்களிலும் இருக்கவில்லை எனவும் எதிர்காலத்திலும் இலங்கையில் இப்படியான பலமான அரசாங்கம் அமையாது எனவும் இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதிக்கு, தமது ஆதரவை வழங்க வேண்டும் என இந்தியாவின் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என். ராம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியா சென்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்று, சென்னையில் நடைபெறும் ஊடகவியலாளர்களின் ஆசிய பயிற்சி மத்திய நிலைத்திற்கு சென்றிருந்த போது, ராம் இதனை கூறியுள்ளார்.
புலிகள் போல்போட் தளபதியை போன்று எவ்வித ஈரக்கமின்றி மனிதர்களை கொலை செய்ததன் காரணமாக, புலிகள் போரில் அழியும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், புலிகளுக்கு அஞ்சி அமைதியான கொள்கையை கடைபிடித்து வந்தனர்.
எனினும் தற்போது புலிகள் அழிந்து விடடதால், தமது கிடைத்துள்ள அரசியல் சுதந்திரத்தை எவருக்கும் அஞ்சாது, நாட்டுக்கு நன்மை தரும் வகையில், பயன்படுத்த வேண்டும். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள்,ஜனாதிபதியுடன் ஒன்றாக கைகோர்த்து கொண்டு, இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை ஏற்படுத்த தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் ராம் கூறியுள்ளார்.
புலிகளின் இரண்டு பாரிய தவறுகள் காரணமாக தமிழகத்தில் இருந்து அந்த அமைப்புக்கு கிடைத்து வந்த உதவிகள் முற்றாக இல்லாமல் போயுள்ளன. 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடன் போரில் ஈடுபட்டமை, 1991 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தமை ஆகிய காரணங்களினால், இந்தியா அரச மற்றும் மககளின் இருந்த அனுதாபம் இல்லாமல் போனது. தற்போது இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் புலிகள் அமைப்புக்கு எந்த விதத்திலும் உதவுவதற்கு முன்வர மாட்டார்கள்.
எனினும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று அவசியம் என்ற நிலைப்பாட்டில் தமிழக மக்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற டெசோ மாநாட்டின் போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறிய போதிலும் இது ஒரு அரசியல் கருத்தாகும். இது குறித்து தமிழக அரசியல் வாதிகளுக்கு எந்த அக்கறையுமில்லை எனவும் ராம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment