Tuesday, December 11, 2012

மாத்தளை புதைகுழி மண்டையோடுகள் எக்காலத்தைச் சேர்ந்தவை; ஆய்வுகள் ஆரம்பம்!

Tuesday, December 11, 2012
இலங்கை::மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த புதைகுழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகள் மற்றும் மனித எச்சங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது தொடர்பில் ஆராய்வதே இந்த விசாரணைகளின் நோக்கம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிக்குள் இருந்து இதுவரை 43 மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மனித எச்சங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசேட பொலிஸ் குழுவொன்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

No comments:

Post a Comment