Thursday, December 06, 2012
இலங்கை::புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 9 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவு தகவல்களுக்கு அமைய பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் குறித்த முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment