Sunday, November 25, 2012

இலங்கையில் இருந்து மேலும் அகதிகள் அவுஸ்திரேலியாவுக்குள் செல்லாதிருப்பதற்காக, அவுஸ்திரேலியாவும், இலங்கையும் கூட்டு நடவடிக்கை!

Sunday, November 25, 2012
இலங்கை::இலங்கையில் இருந்து மேலும் அகதிகள் அவுஸ்திரேலியாவுக்குள் செல்லாதிருப்பதற்காக, அவுஸ்திரேலியாவும், இலங்கையும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை இருந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் தொழில்வாய்ப்புக்களை பெறும் நோக்கில் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிப்பவர்களுக்கு ஏமாற்றம் மாத்திரமே காத்திருக்கும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நோக்கில் அவுஸ்திரேலியா வருகின்ற அகதிகள் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment