Monday,November 05, 2012
இலங்கை::மூன்று சிரேஸ்ட இராணுவ மேஜர் ஜெனரல்களை இராஜதந்திர சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரேஸில், தென் ஆபிரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தூதரங்களில் இவ்வாறு இராணுவ மேஜர்கள் கடமையாற்ற உள்ளனர். பிரேஸில் நாட்டின் துணைத் தூதுவராக மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன நியமிக்கப்பட உள்ளார்.
இஸ்ரேலின் துணைத் தூதுவராக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் நியமிக்கப்பட உள்ளார். தென் ஆபிரிக்காவின் துணைத் தூதுவராக தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றி வரும் மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட உள்ளார்.
எதிர்வரும் இரண்டு மாதங்களில் இந்த அதிகாரிகள் குறித்த நாடுகளின் துணைத் தூதுவர் பதவிகளை பொறுப்பேற்றக் கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்று இராணுவ மேஜர்களும் கஜபா படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment