Saturday, November 3, 2012

ஹெஜிங் வழக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தோல்வி!

Saturday, November 03, 2012
இலங்கை::60 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான ஹெஜிங் வழக்கில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தோல்வியடைந்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி சேவை சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க டொய்ஷ் வங்கிக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இதன் பிரகாரம் 60.3 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் வட்டி என்பவற்றை அந்த வங்கிக்கு செலுத்தவேண்டும் என்றும் வழக்குத் தீர்ப்பை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெஜின் உடன்படிக்கைக்கு அமைவாக 460 மில்லியின் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கொடுப்பனவை செலுத்தாமை தொடர்பில் ஸ்டேன்டர்ட் சார்ட்டட், சிடி குரூப் மற்றும் டொய்ஷ் ஆகிய வங்கிகள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.

No comments:

Post a Comment