Monday,November 05, 2012
இலங்கை::இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்துவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
தற்காக இலங்கை கடற்பரப்பில் மேலுத் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மீனவர்களுக்கு சுதந்திரமாக மீன் பிடிப்பதற்கான சூழல் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
நேற்று இந்து சமுத்திர கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தாக்குதலுக்கு உள்ளானதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது தமிழக மீனவர்களின் 30 படகுகளிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment