Monday, November 26, 2012

இலங்கை புகலிடம் கோருவோர் குடும்பங்களை அவுஸ்திரேலியா நாடு திருப்பியது!

Monday, November 26, 2012
இலங்கை::ஐந்து குழுக்களைக் கொண்ட இலங்கை சேர்ந்த புகலிடம் கோரிய குடும்பங்களை அவுஸ்திரேலிய அரசானது நாடுதிருப்பியுள்ளது. இவர்களுள் 4 சிறுவர்கள் உட்பட 27 பேர் கிரீஸ்மஸ் தீவில் இருந்து கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலியா குடியகழ்வு மற்றும் பிரஜா உரிமை அமைச்சர் அழுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் ஆகஸ்ட் 13 ஆம் திகதி தொடக்கம் பலவந்தமாக அவுஸ்திரேலியில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மொத்தமாக சுயவிருப்புடன் மற்றும் பலவந்தமாக அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 600 தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:

Post a Comment