Monday, November 26, 2012

இலங்கை இராணுவத்திற்கு அவதூறு: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

Monday, November 26, 2012
இலங்கை::இலங்கை இராணுவத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச ரீதியில் பொய் பிரசாரங்களை மேற்கொண்டதாக கூறப்படும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதென சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் இராணுவத்தில் இணைந்து கொண்ட 109 தமிழ் யுவதிகள் இராணுவத்தினாரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாக இராணுவத்தில் இருந்த விலகியதாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக தெரிவித்திருந்தமையை அடுத்து, அரசாங்கம் இந்த சட்ட நடவடிக்கையை எடுக்க தீர்மானித்துள்ளது.

மூன்று தமிழ் யுவதிகள், இராணுவ பயிற்சிகளில் ஈடுபட முடியாத சிரமம் காரணமாக இராணுவத்தில் இருந்து விலகி சென்வுள்ளனர். எனினும் இந்த யுவதிகள் பாலியல் வல்;லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை காரணமாகவே, இராணுவத்தில் இருந்து விலகியதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பீ.பீ.சி மற்றும் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்துக்கள் காரணமாக இலங்கை அரசாங்கம், இராணுவம் மற்றும் மூன்று தமிழ் யுவதிகள் சர்வதேச ரீதியில் பெரும் அசௌகரிய நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர் எனவும்அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment