Sunday, November 04, 2012
இலங்கை::காலி, போத்தல, வல்பிட்டிவத்த மஹா சேஹோன் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட நான்கு சடலங்களில் ஒரு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
காலி டிக்ஷ்சன் சந்தியில் கடந்த 25ஆம் திகதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வர்த்தகரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேகநபருடையது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கைகள் கட்டப்பட்ட நிலையில் நான்கு சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டன. குறித்த பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்டுள்ள பிச்சினையே கொலைகளுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
காலி – போதல வல்பிட்டவத்தையில் இன்று காலை மீட்கப்பட்ட நான்கு சடலங்களும், ஏற்கனவே காலியில் இடம்பெற்ற கொலை ஒன்றுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கைகள் கட்டப்பட்டு, முகம் மறைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே காலி டிக்சன் வீதியில் கடந்த மாதம் 25ம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்ட சடலங்கள், இந்த கொலை சமபவத்துடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் அவர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment