Thursday, November 29, 2012

இலங்கையில் மனிதாபிமானப் பண்புகள் நிறைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது - இலங்கைக்கான அமெரிக்க உயர் ஸ்தானிகர் மிச்சேல் சிசன்!

Thursday, November 29, 2012
இலங்கை::இலங்கையில் மனிதாபிமானப் பண்புகள் நிறைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதென இலங்கைக்கான அமெரிக்க உயர் ஸ்தானிகர் மிச்சேல் சிசன் தெரிவித்தார்.

கண்டியில் இயங்கும் ஆறு இளைஞர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கண்டி முஸ்லிம் இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அநாதரவு மற்றும் விஷேட உதவிகள் தேவைப்படும் சிறுவர்களுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் மேலும் கூறுகையில்,

நான் ஒரு இராஜதந்திரியாக முப்பது வருடங்கள் சேவை புரிந்துள்ளேன். எனது சேவைக்காலத்தில் கிறிஸ்தவ இளைஞர் சங்கம், முஸ்லிம் இளைஞர் சங்கம், பௌத்த இளைஞர் சங்கம், இந்து இளைஞர் சங்கம் எனக்கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் இந்த ஆறு இளைஞர் அமைப்பு பற்றி இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்றுதான் நான் இதைப்பற்றிக் கேள்விப்படுகிறேன். எனவே, சிக்ஸ் வைய்ஸ் (6 Y’s) என்ற இவ்வமைப்பு தொடர்பாக எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேவேளை, கடந்த 30 வருடகால யுத்தத்தை சந்தித்த உங்களில் இன்னும் மனிதாபிமானம் இருப்பதைக்கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேனெனத் தெரிவித்தார்.

இவ் வைபவத்தில் கண்டி நகர பிதா மற்றும் வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் தலைவர் ஆகியோர் உரையாற்றியதுடன் அமெரிக்கத் தூதுவர் விஷேட தேவையுடைய சிறுவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்களையும் வழங்கினார்.

No comments:

Post a Comment