Friday, October 26, 2012

தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பை பதிவு செய்யும் நோக்குடன் நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடல் இணக்கமின்றி நிறைவடைந்துள்ளது!

Friday, October 26, 2012
இலங்கை::தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பை பதிவு செய்யும் நோக்குடன் நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடல் இணக்கமின்றி நிறைவடைந்துள்ளது.

கூட்டமைப்பு பதிவு தொடர்பில் தொடர்ந்தும் பேசலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர் சம்பந்தன் கலந்துரையாடலின் இறுதியில் தெரிவித்தார்.

எனினும், அதற்கான உறுதியான திகதி அறிவிக்கப்படவில்லை.

அதேநேரம், தமிழரசு கட்சியை தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளும் இதற்கு எவ்வித பதில்களையும் வழங்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கம், சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் வீ ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதற்கு அப்பால், வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜ பெருமாள் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்நாபா அணியும் ஏனைய சிறிய தமிழ் கட்சிகளும் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விருப்பம் வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், நேற்றிடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு அந்த கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசு கட்சிக்கு விருப்பம் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

எனினும், கூட்டமைப்பு கட்சிகள் மத்தியில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றை செய்து கொள்ளலாம் என்ற கருத்தை தமிழரசு கட்சி தெரிவித்தது.

தமிழரசு கட்சியின் இந்த நிலைப்பாட்டை ஏனைய கூட்டமைப்பு கட்சிகள் ஏற்று கொள்ளவில்லை.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்;பு புதுடில்கி சென்ற போது தமிழர் விடுதலை கூட்டணியையும், தமிழீழ மக்கள் விடுதலை கழககத்தையும் இணைத்து கொள்ளமை தொடர்பாகவும் நேற்றைய கலந்துரையாடலில் அதிருப்தி வெளியிடப்பட்டது.

இதன்போது, தமிழரசு கட்சியின் சார்பில் நியாயங்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் என்ற வகையில் கூட்டத்திற்கு முன்னரோ அல்லது பின்னரே புதுடில்கி பயணம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான உறுதியான நிலைப்பாடுகள் இன்றி நேற்றைய கலந்துரையாடல் நிறைவடைந்தது.

இது தொடர்பாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது குரல் பதிவுகளை பெற்று கொள்வதற்காக எமது செய்தி சேவை முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.

No comments:

Post a Comment