Tuesday, October 2, 2012

முன்னாள் லெப்.,ஜெனரல் மீது தாக்குதல் ; மர்மநபர்களை பிடிக்க யார்டு போலீஸ் தீவிரம்!

Tuesday, October 02, 2012
லண்டன்::இந்திய திருநாட்டின் முன்னாள் ராணுவ லெப்டினட் ஜெனரல் மீது மர்ம நபர்கள் லண்டனில் கடும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என கண்டுபிடிக்க முடியாமல் ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் திணறி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் சீக்கிய மத பொற்கோயிலில் சீக்கிய பயங்கரவாதிகள் மீது 1984 ல் புளுஸ்டார் என்ற பெயரில் எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கைக்கு தலைமை வகித்தவர் லெப்டினன்ட் ஜெனரல் குல்தீப்சிங் பிரார். இவர் தற்போது லண்டன் சென்றுள்ளார். இங்கு ஒரு டின்னர் பார்ட்டியில் பங்கேற்று திரும்பிய போது 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் இவரை கத்தியால் குத்தி காயப்படுத்தினர். இவருடன் வந்த மனைவியை அடித்து தாக்கி தரையில் தள்ளினர். பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர். ..

மாஜி ராணுவ தளபதிக்கு லண்டனில் கத்திக்குத்து!:-Ôபுளூ ஸ்டார்Õ ஆபரேஷன் நடத்திய லெப்டினன்ட் ªஐனரல் பிராரை கத்தியால் குத்தியது யார்?

சீக்கிய பிரிவினைவாதத்தை ஒடுக்க, பொற்கோயிலில் நடந்த புளூ ஸ்டார் ஆபரேஷனில் பங்கேற்ற லெப்டினனட் கே.எஸ்.பிராரை, லண்டனில் மர்ம ஆசாமிகள் கத்தியால் குத்தினர். இதில் சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்களை லண்டன் போலீசார் வெளியிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பொற்கோயிலில் கடந்த 1984ம் ஆண்டு சீக்கிய பிரிவினைவாதிகள் புகுந்து கொண்டு வன்முறைகளில் ஈடுபட்டனர். அவர்களை வெளியேற்ற அப்போதைய ராணுவ தளபதி ஏ.எஸ். வைத்யாவுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி புளூ ஸ்டார் ஆபரேஷன் என்ற பெயரில் ராணுவத்தினர் அதிரடியாக பொற்கோயிலில் நுழைந்து பிரிவினைவாதிகளை வெளியேற்றினர். இந்த ஆபரேஷனில் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.பிராரும் இருந்தார். இந்நிலையில், கடந்த 1986ம் ஆண்டு புனேவில் வைத்யா சுட்டுக் கொல்லப்பட்டார். பிராரையும் கொல்ல பல முறை முயற்சி நடந்தது. இப்போது 78 வயதாகும் பிரார், மும்பையில் தங்கி உள்ளார். மனைவியுடன் லண்டன் சென்றிருந்தார். இன்று அவர் இந்தியா திரும்புவதாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம ஆசாமிகள் 4 பேர், லண்டனில் உள்ள பிஸியான மார்பிள் ஆர்ச் பகுதியில் பிராரை கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் அவர் அபாயகட்டத்தை தாண்டி விட்டார். இதுகுறித்து லண்டன் போலீசார் கூறுகையில், Ôபிரார் மீது தாக்குதல் நடத்தியவர்கள், நீண்ட கறுப்பு நிற அங்கி அணிந்திருந்தனர். நீண்ட தாடியுடன் இருந்தனர். அவர்களை பற்றி தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தெரிவிக்கலாம்Õ என்று அறிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரார் கூறுகையில், Ôஆண்டுதோறும் ஜூன் 6ம் தேதி புளூ ஸ்டார் ஆபரேஷன் நினைவு தினமாக லண்டனில் உள்ள சீக்கியர்கள் அனுசரித்து வருகின்றனர். என்னை கொல்ல இன்டர்நெட்டில் பல மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. இது திட்டமிட்ட நடந்த சதிதான்Õ என்றார். இதையடுத்து அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment