Tuesday, October 02, 2012
இலங்கை::பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ருவன்வெல்லவைச் சேர்ந்த சோபித்த எனப்படும் சுனில் சாந்த உள்ளிட்ட மூவருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் இன்று 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட யுவதிக்கு குறித்த மூவரும் தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டார்.
அத்துடன் அவர்களுக்கு 20ஆயிரம் ரூபா வீதம் தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு புளத்கொஹூபிட்டிய பகுதியின் தேயிலை தோட்டமொன்றில் குறித்த யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ருவன்வெல்ல சோபித்தவுடன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட யுவதியின் மாமாவிற்கும் மாமியாருக்கும் இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment