Tuesday, October 2, 2012

போர் குற்றங்களை சுமத்தும் நோக்கில் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் குழு ஐ.நா சென்றுள்ளது - திவயின!

Tuesday, October 02, 2012
இலங்கை::அடுத்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தும் நோக்கில், புலிகளின் சர்வதேச வலையமைப்பின் 10 பேர் அடங்கிய குழுவொன்று ஜெனிவா சென்றுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.


புலிகளின் உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, புலிகளின் ஆதரவு அமைப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த வேலைத்திட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது.

போர் குற்றச்சாட்டுகள் அடங்கிய இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக புலிகளின் உலக தமிழர் பேரவையின் தலைவர். அருட் தந்தை இம்மானுவேல், சுரேன் சுரேந்திரன் ஆகியோர் கடந்த 23 ஆம் திகதி தென்னாப்பிரிக்கா, ஸ்வாசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று அந்த நாடுகளில் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதனை தவிர ஜெனிவா சென்றுள்ள புலிகளின் குழுவினர் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அவசர மின்னஞ்சல்களை அனுப்பி, அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த சந்தர்ப்பம் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில், நவம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை கொண்டு வருமாறு, உலக தமிழர் பேரவையின் தலைவர், தென்னாப்பிரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள புலிகளுக்கு எதிரான தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின கூறியுள்ளது

No comments:

Post a Comment