Tuesday, October 2, 2012

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் தேக்கநிலையில் உள்ள பேச்சு வார்த்தைக்கு உதவ தயார் - இந்தியா!

Tuesday, October 02, 2012
சென்னை::இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் தேக்கநிலையில் உள்ள பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி புரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை நோக்கி பயணத்தில் இரண்டு பக்கங்களிலும் உள்ள தாமதம் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் புதுடில்லியில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு டெல்கி அழைப்பு விடுத்தனை தொடர்ந்து எதிர்வரும் 10 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உள்ளிட்ட குழு டெல்கி செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment