Monday, October 29, 2012
சென்னை::தமிழக சட்டசபை வைரவிழா நினைவு வளைவு அமைப்பதற்கான அடிக்கல்லை முதல்வர் ஜெயலலிதா இன்று நாட்டினார். தமிழக சட்டசபை தொடங்கி (19522012) 60வது ஆண்டை நினைவுகூரும் வகையில் தலைமை செயலகம் எதிரே பிரமாண்டமான வைரவிழா நினைவு வளைவு அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். சட்டசபையில் வைரவிழா கூட்டம் நவம்பர் 30ம்தேதி கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தலைமை செயலகத்துக்கும் போர் நினைவு வளைவு சின்னத்துக்கும் இடையே ராஜாஜி சாலையில் சட்டசபை வைரவிழா நினைவு அமைப்பதற்கான இடத்தை ஜெயலலிதா பார்வையிட்டு தேர்வு செய்திருந்தார்.
அந்த இடத்தில் வைரவிழா நினைவு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. சரியாக 9.30 மணிக்கு அங்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், தலைமை கொறடா வைகை செல்வன், தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் முதல்வர் ஜெயலலிதா சட்டசபை நினைவு வளைவுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
முதல் வரிசையில் தேமுதிக எம்எல்ஏக்கள்
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்திய தேமுதிக எம்எல்ஏக்களான சுந்தர்ராஜன், தமிழழகன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் சட்டசபை நினைவு வளைவு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றனர். அவர்களுக்கு விழா மேடையில் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment