Friday, October 5, 2012

சிங்கள ராவய, சிங்கள ஜாதிக பெரமுன அமைப்புகள் விக்ரமபாகு கருணாரட்னவுக்கு எதிராக முறைப்பாடு!

Friday, October 05, 2012
இலங்கை::சிங்கள ராவய, சிங்கள ஜாதிக பெரமுன ஆகிய அமைப்புகள், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவுக்கு எதிராக காவற்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபரிடம் முறைப்பாடுகளை செய்துள்ளன.
நேற்று தாம் இந்த முறைப்பாடுகளை கையளித்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மெடெல்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் அமைப்பின் 157 (அ) 1 ஷரத்தின் கீழ், இலங்கைக்கு தனிநாடு அமைக்க அல்லது அதற்காக செயற்படும் அமைப்புகளுக்கு உதவிகளை செய்வது குற்றம் எனவும் இதனடிப்படையில், கருணாரட்ன இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியுள்ளதாகவும் இதனால் இது குறித்து விசாரணை நடத்தி அவரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என 60 பக்கங்களை கொண்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், இந்த அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராகவும் இவ்வாறான முறைப்பாட்டை செய்திருந்தமை குறிப்பிடதக்கது. 

No comments:

Post a Comment