Friday, October 5, 2012

கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் 2 1/2 வருட காலம் என்பது உறுதி - ரவூப் ஹகீம்!

Friday, October 05, 2012
இலங்கை::இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கிமை ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு இங்கிலாந்திலுள்ள இன்ட கொண்டினல் ஹோட்டலில் வைத்து சமீபத்தில் சந்தித்து கலந்துரையாடியது.


கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முதலமைச்சர் இரண்டரை வருட காலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் இரண்டரை வருட காலம் என்ற செய்தி சிலர் பொய்யன்று சொல்கின்றார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பின் தலைவர் எம்.எல்;. நஸீர் வினவிய போது அதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் இரண்டரை வருட காலம் என்ற செய்தி உறுதியென்றும் அது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரியான முறையில் ஒப்பந்தங்கள் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இச் சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தல் பற்றியும் எதிர்காலத்தில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது பற்றியும் ,மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பின் நோக்கங்கள் பற்றியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பின் தலைவர் எம்.எல். நஸீர் அமைப்பின் செயலாளர் எஸ்.இஸ்ஸடீன் ஆகியோரினால் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பின் செயலாளர் எஸ்.இஸ்ஸடீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் அமீன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

No comments:

Post a Comment