Wednesday, October 03, 2012
இலங்கை::தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்ப்படுத்துமாறு காவல்துறை மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்..
காவல்துறை நிலையங்கள் இரண்டின் காவல்துறையினர் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் எமது செய்தி பிரிவு தகவல் கிடைக்கப்பெற்றன..
இது தொடர்பில் அவரிடம் வினவப்பட்ட போதே காவல்துறை ஊடக பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொலன்னறுவ – புலஸ்திகம காவல்துறை நிலையத்திற்கு முறைப்பாடு செய்யவந்த பெண்ணிடம், உப காவல்துறை அதிகாரி லஞ்சம் பெற்றுள்ளார்..
இந்த நிலையில் இது தொடர்பில் குறித்த பெண் லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் முறையிட்டுள்ளார்..
இதனை தொடர்ந்து அந்த உப காவல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட போது அவர் லஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, எப்பாவல காவல்துறைக்கு இணைந்ததாக செயற்படும் காவல்துறை அதிகாரி ஒருவர் பெண்ணெருவரிடம் லஞ்சம் பெற முனைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறயினும் இவ்வாறான காவல்துறையினர் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment