Wednesday, October 3, 2012

அனுமதியின்றி பங்குபற்ற முடியாது - ஐ.தே.க!

Wednesday, October 03, 2012
இலங்கை::கட்சியின் அனுமதியின்றி, வேறு அரசியல் கட்சிகளின் பல்வேறு செயற்பாடுகளில் பங்கு கொள்வதற்கு தமது கட்சி அங்கத்தவர்களுக்கு தடை விதிக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.


இதன்படி வேறு கட்சிகள் ஏற்பாடு செய்கின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் சமய பணிகளில் தமது கட்சியின் அனுமதியின்றி கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்படுவதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்..

வேறு அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்கின்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்கு தமது கட்சியின் மத்திய செயற்குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்..

கட்சியின் தலைவர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தினங்களில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் நிகழ்வுகள் பலவற்றில், கட்சியின் அனுமதியின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, தயாசிறி ஜயசேகர, பாலித ரங்கே பண்டார அஷோக அபேசிங்க, பாலித தேவரப்பெறும ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் கட்சியின் தலைவர்கள் பலர் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு செய்த முறைப்பாட்டினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment