Monday, October 29, 2012
இலங்கை::வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம் முல்லலைத்தீவு கடற்பரப்பில் கிழக்குப் பகுதியில் 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பதாக காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை மலையகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் மழை பெய்வதால் நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறந்துவிடப்படுமென இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களுக்கு அது தொடர்பிலான தகவல்களை தாமதமின்றி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நாட்டின் வடபகுதியில் கரையோரத்தை அண்மித்த பகுதிகளில் சூறாவளி அல்லது கடும் காற்று வீசக்கூடுமென திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் டீ.டீ.ஆர்.டீ.சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை முற்றாக தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடற்படை, இராணுவம், விமானப் படை, பொலிஸார் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளும் அவசர நிலைமையின் போது செயற்படுவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment