Sunday, October 28, 2012

சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட சந்தர்ப்பங்களை புலிகள் தவறான வழிகளில் பயன்படுத்திக் கொண்டனர் -கோத்தபாய ராஜபக்ச!

Sunday, October 28, 2012
இலங்கை::புலிகள் சமாதானத்தை விரும்பவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட சந்தர்ப்பங்களை புலிகள் தவறான வழிகளில் பயன்படுத்திக் கொண்டனர். நாட்டில் இனப்பிரச்சினை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மையில்லை.

 புலிகள் தமிழ் மக்களின் நலன்களுக்காக ஒருபோதும் செயற்பட்டத்தில்லை. தங்களது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே புலிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இன, மத சமூக அடிப்படையில் இலங்கையில் எவரது உரிமைகளும் மறுக்கப்படுவதில்லை. தமிழ் மக்கள் சில பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றமை மறுப்பதற்கில்லை என்ற போதிலும் அதனை இன முறுகலாகக் கருத முடியாது.

சகல மக்களுக்கும் சம சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment