Tuesday, October 02, 2012
இலங்கை::உலகக் கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்களை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைதான பிரித்தானிய பிரஜை இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இன்று ஆஜர்செய்யப்பட்டார்.
உலகக் கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டிக்காக விநியோகிக்கப்படாத 84 நுழைவுச் சீட்டுக்களுடனும் விநியோகிக்கப்பட்ட 19 நுழைவுச் சீட்டுக்களுடனும் சந்தேகநபர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார்.
நுழைவுச் சீட்டுக்களை திருடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சந்தேகநபரான பிரித்தானிய பிரஜை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment