Tuesday,September,04,2012இலங்கை::சட்டவிரோதமாக இந்தியாவின் மும்பை நகருக்கு கொண்டு செல்லப்படவிருந்த ஒரு தொகை
தங்கக் கட்டிகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடமிருந்து 16 தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவு குறிப்பிட்டது.
அதன் எடை ஒரு கிலோகிராம் 600 கிராமிற்கும் அதிகமென சுங்கப் பிரிவு தெரிவித்தது.
குறித்த நபர் நேற்றிரவு 11.45 அளவில் மும்பை நோக்கி பயணிக்க முற்பட்ட போது குற்றப்
புலானய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு விமான நிலைய சுங்கப் பிரிவிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தங்கக் கட்டிகளின் பெறுமதி ஒரு கோடியே இருபது இலட்சத்திற்கும் அதிகமென
மதிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment