Wednesday,September,05,2012இலங்கை::வெலிக்கடை சிறைச்சாலை மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 56 கைதிகள்
தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி
சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் கொழும்பு குற்றப்
புலனாய்வுப் பிரிவு, விசாரணைகளின் தரம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெரிவித்த
சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பிலான சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லையென
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.
இதன் காரணமாக சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப்
புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.
இதற்கமைய சந்தேகநபர்களை செப்டம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்ட நீதவான் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பில் ஆலோசனை
பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment