Wednesday,September,05,2012இலங்கை::இலங்கை தலைநகர் கொழும்பில் ரத்தினம் மற்றும் வைர நகைகள் கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியின் துவக்க நாளான இன்று கண்காட்சிக்கு வந்த சீன நாட்டவர் ஒருவர் வைர நகை ஒன்றை ரசித்துப் பார்த்துள்ளார். பின்னர் அந்த நகையை பக்கத்தில் பார்க்க விரும்புவதாக, அங்கிருந்த உரிமையாளரிடம் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
உரிமையாளரின் அனுமதி பெற்று நகையை கையில் வாங்கிய அவர் திடீரென நகையை விழுங்கிவிட்டார். இதனைப் பார்த்ததும் உஷாரான நகை உரிமையாளர் உடனடியாக அருகிலிருந்த போலீசாரின் உதவியை நாடியுள்ளார். நிலைமையை உணர்ந்த போலீசார், அந்த சீன நாட்டவரை கைது செய்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று நகையை மீட்டுள்ளனர்.
அவர் விழுங்கிய நகை 14000 அமெரிக்க டாலர்கள் (ரூ.18 லட்சம்) மதிப்புடையது என நகை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் வைர சுரங்கங்கள் இல்லாவிட்டாலும், அந்நாட்டில் நகைத்தொழில் புகழ்பெற்று விளங்கி வருவதும், அங்கு நகைக் கண்காட்சிகள் அடிக்கடி நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment