Wednesday, September 26, 2012

சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயற்சித்த புலிகள் அமைப்பின் மூன்று உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Wednesday, September 26, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயற்சித்த  புலிகள் அமைப்பின் மூன்று உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரதிவாதிகள் மூவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கை சட்ட மா அதிபரால் இன்று மேல்நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஏப்ரல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு, ரம்புக்கனை மற்றும் வலிவேரிய ஆகிய பிரதேசங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட 230 குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment