Wednesday, September 26, 2012

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் தீர்மானம்!

Wednesday, September 26, 2012
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பிரித்தானியாவில் தஞ்சமடைந்திருந்தவர்களே இவ்வாறு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் அமைதி சூழல் நிலவுதாக தெரிவித்து இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் இவர்கள் அனைவரையும் கட்டம் கட்டமாக இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட தேவையான ஏற்பாடுகளைப் பிரித்தானிய அரசு மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment