Tuesday, September 25, 2012
இலங்கை::மேற்குலக நாடுகள் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக முன்வைக்கும் விடயங்கள் அடிப்படையற்றவை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பிரதிநிதிகளை அண்மையில் தனது அமைச்சில் சந்தித்து பேசிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் அரசாங்கம் அதிகம் அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்திடம் சரணடைந்த 11 ஆயிரம் புலிகளுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி அவர்களை சமூகத்தில் சுதந்திரமாக வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகள், இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என்பது அண்மையில் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான சனத் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment