Wednesday, September 26, 2012

தமிழகத்திற்கான பயண எச்சரிக்கை தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை - இலங்கை அரசாங்கம்!

Wednesday, September 26, 2012
இலங்கை::தமிழகத்திற்கான பயண எச்சரிக்கை தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கான பயண எச்சரிக்கையை தளர்த்துவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவுமு; எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கான பயணங்கள் தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

பயண எச்சரிக்கையை தளர்த்துவது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

தமிழகம் செல்லும் இலங்கையர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சு பயண எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு விஜயம் செய்யும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment