Wednesday, September 26, 2012

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை - சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வருத்தம் வெளியிட்டுள்ளார்!

Wednesday, September 26, 2012
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்வில் பங்கேற்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வருத்தம் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர். பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஹொரகொல்லவில் நடைபெற்ற பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை எனவும், அதற்கான காரணம் என்ன என்பத தமக்குத் தெரியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1956ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி எஸ்.டபிள்யூ.ஆர். பண்டாரநாயக்க துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களும் விசுவாசிகளும் ஸ்தாபகத் தலைவரை நினைவு கூறத் தவறுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment