Thursday, September 27, 2012
இலங்கை::கிளிநொச்சில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பரவிப்பாஞ்சான், மருதநகர், இரணைதீவு மற்றும் கிளிநொச்சி நகரம் ஆகிவற்றில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கிளிநொச்சி மக்களினால் ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் மனித உரிமை ஆணையாளர் ஆகியோருக்கு மகஜர் ஒன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இன்று வியாழக்கிழழை கிளிநொச்சியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கிளிநொச்சியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐ.நா. உயர்தானியராலய வதிவிட பிரதிநிதி விக்டோரியாவிடம் மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டது.
குறித்த நான்கு பிரதேசங்களிலும் வாழ்ந்த மக்களின் காணி உரிமங்கள் மற்றும் வரைபடங்கள் என்பனவும் இந்த மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதனைப் பெற்றுக்கொண்ட வதிவிட பிரதிநிதி விக்டோரியா, அதனை உரிய தரப்பினரிடம் விரைவில் சேர்ப்பதாக தெரிவித்தார். அதேவேளை குறித்த மகஜரின் பிரதி கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment