Thursday, September 27, 2012
இலங்கை::கிளிநொச்சி நவீன சந்தையின் சகல தொகுதிகளையும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார்ந்தோரிடம் பணிப்புரை வழங்கினார்.
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள நவீன சந்தைப் பகுதிக்கு இன்றைய தினம் (27) அமைச்சர் அவர்கள் விஜயம் மேற்கொண்டார். அங்கு ஏற்கனவே மரக்கறி, மீன், இறைச்சி கடைகள் அடங்கிய தொகுதிகள் இயங்கத் தயாரான நிலையிலுள்ளன. இந் நிலையில் டிப்போ வீதியில் சந்தையின் ஏனைய கடைத்தொகுதிகள் தற்போது இயங்கி வரும் நிலையில் அவற்றை நவீன சந்தைப்பகுதியில் தற்காலிகமாகவேனும் இயக்குவதற்கேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு தெரிவித்ததுடன் இதன்போது எதிர்கொள்ளப்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தினார்.
கிளிநொhச்சி நவீன சந்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 284 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முதற்கட்டம் 38 மில்லியன் ரூபாவில் முதற்கட்ட வேலைகள் முடிவடைந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் இம் மாதம் 25ம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன் ஏனைய கட்டுமானப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்மராட்சி சரசாலைபப்பகுதிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப் பகுதி மக்களது தேவைகள் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
சரசாலை சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மயானப் புனரைமப்பு, வீதிப் புனரமைப்பு, மின்சாரம், குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் தாம் எதிர் நோக்கிவரும் இடர்பாடுகள் உள்ளிட்;ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் அவர்களுக்கு எடுத்துக் கூறினர்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக விவசாய மற்றும் பொறியியல் பீட வளாகத்தில் இன்றைய தினம் (27) காலை பாரிய சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்களும் கலந்து கொண்டு மேற்படி சிரமதானப் பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
சிரமதானப் பணிகளில் சுமார் 2000ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், அரச அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக் கழகங்களின் விரிவுரையாளர்கள், அதிகாரிகள,; பணியாளர்கள,; கல்விச் சமூகத்தினர் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்ட இச் சிரமதானப் பணிகள் மிகவும் காத்திரமான முறையில் பாரிய அர்ப்பணிப்புக்களுடன் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கடும் முயற்சியின் காரணமாக யாழ் பல்கலைக் கழகத்திற்கான பொறியியல் பீடம் அமையப் பெறவுள்ளதுடன் விவசாயம் மற்றும் பொறியியல் பீடங்கள் மேற்படி வளாகத்தில் செயற்படவுள்ளமையும் 568 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட இவ் வளாகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வேண்டுகோளுக்கு அமைவாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களால் அண்மையில் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய தின சிரமதானப் பணிகளில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், யாழ் கல்கலைக்கழக உபவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம், பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




No comments:
Post a Comment