இலங்கை::இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 28 இந்திய மீனவர்கள், நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தின் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த 28 மீனவர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான்கு இயந்திர படகுகள் மூலம் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பகுதிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment