Sunday, August 26, 2012சென்னை::அதிமுக தலைமை நிலைய நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை நிலைய செயலாளராக உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமை செயற்குழு கூட்டம், சென்னையில் நாளை நடக்கிறது. இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் சிலரை மாற்றம் செய்து அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக அமைப்புச் செயலாளர் பா.வளர்மதி, கோவை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.செல்வராஜ், தர்மபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பி.பழனியப்பன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வகித்து வந்த தலைமை நிலையச் செயலாளர் பதவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாய பிரிவு செயலாளராக தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் வாரிய தலைவர் கு.தங்கமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். இலக்கிய அணி செயலாளராக சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி யும், அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment