Sunday, August 26, 2012

இரானுவ தொழில்நுட்ப பிரிவின் அனுசரணையில் கண்ணிவெடி விளிப்புனர்வுக் கருத்தரங்கு!

Sunday, August 26, 2012
இலங்கை::பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை இரானுவத்தின் 7வது படை பிரிவின் மின்னேரிய தொழிநுட்ப பிரிவின் அனுசரனையில் கண்ணிவெடி விளிப்புனர்வுக் கருத்தரங்கு யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தில் நடாத்தப்பட்டுகின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாவிதன்வெளி பிரதேசத்தில் மிதி வெடியில் இருந்து எப்படி பாதுகாப்பு பெறுவதுதொடர்பான விளிப்புனர்வு கருத்தரங்கு 15 ஆம் கொளனி விவேகானந்தா மகா வித்தியாலத்தில் 16 ஆம் கொளனி இரானுவ நிலைய பொறுப்பாதிகாரி கெப்டன் திஸ்ஸ நாயக்க தலைமையில் நடைபெற்றது.

விளிப்புனர்வு கருத்தரங்கில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் வடிவங்கள் காண்பிக்கப்பட்டதுடன் காணப்படும் பிரதேசங்கள், இதில் சிக்கியவர்களின் நிலைகளையும் ஆபத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வழிகள் போன்ற விடையங்கள் படங்கள் முலம் இரானுவத்தினரால் விளக்கமளிக்கப்பட்டது.

இக் கருத்தரங்கில் நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பாடசலை மாணவர்கள், சிறுவர்கள்,முதியோர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டு நன்மையடந்தனர்.

No comments:

Post a Comment