Tuesday, August 28, 2012

திருமாவளவன் உள்பட 300 பேர் கைது!

Tuesday, August 28, 2012
பூந்தமல்லி::சிறப்பு முகாமில் உள்ள இலங்கை அகதிகளை விடுதலை செய்ய கோரி, பூந்தமல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகாமை முற்றுகையிட சென்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு சாந்தகுமார், ஜெயமோகன், பரமேஸ்வரன், தர்ஷன், பாகீரதன், பிரதீபன், கங்காதரன், முருகன் (எ) செந்தூரான் என 8 பேர் உள்ளனர். செங்கல்பட்டு, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சிறப்பு முகாம்களில் உள்ள அகதிகளை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற கோரி இலங்கை அகதி செந்தூரான் கடந்த 6ம் தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அகதிகளை விடுதலை செய்ய கோரி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் பூந்தமல்லி குமணன் சாவடியில் இன்று காலை 11 மணியளவில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முகாமை முற்றுகையிட சென்ற திருமாவளவன் உள்பட கட்சியினர் 300 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

No comments:

Post a Comment