
Tuesday, August 28, 2012இலங்கை::இரண்டு கள்ளப் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயற்சித்த 147 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
64 தமிழர்கள் மற்றும் 2 சிங்களவர்கள் அடங்களாக 66 பேரை ஏற்றிய ´ஜெத்சமணி´ என்ற படகு பேருவளை கடலில் இருந்து 22 மைல் தூரத்தில் வழிமறிக்கப்பட்டுள்ளது.
59 தமிழர்கள் மற்றும் 22 சிங்களவர்கள் அடங்களாக 81 பேரை ஏற்றிய ´பஞ்சலி துவ 4´ என்ற படகு சிலாபம் கடலில் இருந்து 20 மைல் தூரத்தில் வழிமறிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் செல்ல முயற்சித்த 147 பேரில் ஆண், பெண் இருபாலாரும் அடங்குவதாகவும் இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, கிளிநொச்சி, சிலாபம், புத்தளம், கொழும்பு, நீர்கொழும்பு, குருநாகல் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பிடிக்கப்பட்ட அனைவரும் மோதர துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு பின்னர் மேலதிக விசாரணைகளுக்கென குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment