Wednesday,July 04, 2012
இலங்கை::கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்வரும் 5ம் திகதிக்குப்பின்னரே தெரிவு செய்யப்படுவார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதி தவைருமான பொன் செல்வராசா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக அவரிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு கூறினார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் எதிர்வரும் 5ம் திகதி நடைபெறவுள்ளது அதன் பின்னரே வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.கிழக்கு மாகாண சபை தொடர்பாக இரண்டு வழக்குகள் நீதி மண்றத்தில் உள்ளன. இதையும் பார்த்து நாம் முடிவெடுப்போம்.
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும்.கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. அதற்காக பலர் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் இன்னும் யார் வேட்பாளர்கள் என்பதை நாம் முடிவு செய்யவில்லை. 5ம் திகதி நடைபெறும் கூட்டத்திலேயே வேட்பாளர்கள் தொடர்பில் நாம் முடிவெடுப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment