Wednesday, July 4, 2012

சேறு பூசல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இணைய தளங்கள் மூடப்படும் - ஊடகஅமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Wednesday,July 04, 2012
சேறு பூசல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இணைய தளங்கள் மூடப்படும் என ஊடகஅமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய தரப்பினரை இலக்கு வைத்து சில இணைய தளங்கள் சேறுபூசி வருவதாகவும், அவ்வாறான இணைய தளங்கள் விரைவில் மூடப்படும் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

சில இணைய ஊடகங்களின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத்தெரிவித்துள்ளார்.

போலியான தகவல்களை வெளியிட்டு வரும் சில இணைய தளங்கள் தொடர்பில் பலமுறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு;ளளார்.

எதிர்க்கட்சியினருக்கு பிரச்சாரம் செய்யும் நோக்கில் ஏனைய தரப்பினர் மீது சேறுபூசும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக சுதந்திரம் தொடர்பில் அரசாங்கத்திற்கு நம்பிக்கை இருப்பதாகவும்,அதற்காக ஊடகத் துறையில் இடம்பெற்று வரும் அநீதிகளை வேடிக்கை பார்க்க முடியாது எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னரே லங்கா எக்ஸ் நியூஸ் மற்றும் ஸ்ரீலங்கா மிரர் ஆகிய இணையதளங்கள் முடக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நன்மதிப்பை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டப்படுகின்றது – கெஹலியரம்புக்வெல்ல!

நாட்டின் நன்மதிப்பை சீர்குலைக்கும் நோக்கில் சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுவருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் சொர்க்கபுரியாக இலங்கை காணப்படுகின்றது எனசித்தரித்து அதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகலிடம் கோரிய மற்றும் கவிழ்ந்த படகுகளில் பயணம் செய்தவர்களில் இலங்கையர்கள்எவரும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் முக்கிய கேந்திர நிலையமாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல்கள் பொய்யானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில தரப்பினர் தங்களது உள் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில்இலங்கையை சர்வதேச புகலிடக் கோரிக்கை விவகாரங்களில் தொடர்புபடுத்த முயற்சித்து வருவதாகத்தெரிவித்துள்ளார்.

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் இவ்வாறானதகவல்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுளளார்.

அண்மையில் இடம்பெற்ற படகுச் சம்பவங்களில் இலங்கையர்கள் தொடர்புபட்டிருக்கவில்லைஎன்ற போதிலும், இலங்கையர்களை தொடர்புபடுத்தி தகவல்கள் வெளியாகியிருந்ததாகத்தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment