Tuesday, July 03, 2012
சென்னை::தமிழகம் முழுவதும் திமுகவினர் நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகின்றனர். எதிர்க்கட்சியினர் மீது அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து 4ம் தேதி சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும்’ என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து சிறைநிரப்பும் போராட்டம் குறித்த விளக்க பொதுக்கூட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. தென்சென்னையில் 8 இடங்களிலும், வடசென்னையில் 8 இடங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது. வெவ்வேறு இடங்களில் நடக்கும் போராட்டத்துக்கு ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., நா.ராமலிங்கம், கோ, நடராசன், டி.ரமேஷ், க.பரமசிவம், மா.பா. அன்புதுரை, கே.ஏழுமலை, மு.மகேஷ்குமார், க.தனசேகரன், மயிலை வேலு, இந்திராநகர் மு.ரவி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். வடசென்னையில் கட்பீஸ் பழனி, க.ஜெயராமன், ஐசிஎப் வ.முரளிதரன், டன்லப் பி.இரவி, செ.தமிழ்வேந்தன், அ.மணிவேலன், கோ.ஏகப்பன், டி.வி.சதீஷ்குமார் ஆகியோர் தலைமை ஏற்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தா.மோ.அன்பரசன், மீ.அ.வைத்தியலிங்கம், கே.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, வெ.விசுவநாதன், த. துரைசாமி, எம்.கே.தண்டபாணி, ஆர்.கோ.பாண்டுரங்கன், த.விசுவநாதன், ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் 10 இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் மாதவரம் எஸ்.சுதர்சனம், க.சுந்தரம், இ.ஏ.பி.சிவாஜி, கும்மிடிப்பூண்டி கி.வேணு, ஆ.கிருஷ்ணசாமி, தி.வ.விஸ்வநாதன், கே.நீலகண்டன், என்.எம்.துரைசாமி, பி.இரவீந்தரநாத் ஆகியோர் தலைமையில் 9 இடங்களிலும் போராட்டம் நடக்கிறது. இதே போல் தமிழகம் முழுவதும் சிறைநிரப்பும் போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டத்தில் இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, மீனவர் அணி, விவசாய அணி உள்ளிட்ட அனைத்து அணியினரும் திரளாக பங்கேற்கின்றனர். சிறைநிரப்பும் போராட்டத்தை அமைதி வழியில் நடத்தவேண்டும் என கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக அரசு பொறுப்பு ஏற்று ஓராண்டு கழித்து, மிகப் பெரிய அளவில் திமுக நடத்தும் போராட்டம் என்பதால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

No comments:
Post a Comment